/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துர்நாற்றம் வீசும் குடிநீர் வினியோகம்
/
துர்நாற்றம் வீசும் குடிநீர் வினியோகம்
ADDED : ஜூலை 28, 2025 05:20 AM
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் இரு நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசுகிறது. குளோரினேசன் செய்து துாய்மையான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நகராட்சியில் 30 வார்டுகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து, பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து ராஜ வாய்க்கால் வழியாக குடிநீர் தொட்டிக்கு வந்து, சுத்திகரிப்பு செய்து பெரியகுளம் நகராட்சி பகுதியில் தினமும் 48 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் ஆகிறது. இரு நாட்களாக குடிநீரில் சுத்திகரிப்பு செய்யாமல் வினியோகிப்பதால் நுர்நாற்றம் வீசுவதால், பொது மக்கள் நகராட்சி குடிநீரை சேகரிப்பதில் நிறுத்தினர். இதனால் குடிநீருக்கு குடிநீர் கேன்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குடிநீர் கேன்கள் வாங்க சிரமப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குடிநீரை குளோரினேசன் செய்து துாய்மையான குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.-