/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் குப்பை கிடங்கில் தொடரும் தீயினால் புகை
/
கூடலுார் குப்பை கிடங்கில் தொடரும் தீயினால் புகை
ADDED : மார் 06, 2024 04:49 AM

கூடலுார் : கூடலுார் நகராட்சி குப்பை கிடங்கில் தொடர்ந்து ஏற்படும் தீயினால் புகை வெளியேறி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கூடலுார் நகராட்சியில் சேகரமாகும் குப்பை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பெத்துக்குளத்தில் கொட்டப்படுகிறது. இப்பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் யூனிட் இருந்தபோதிலும் குப்பை தினந்தோறும் மலை போல் தேங்கி கிடக்கிறது. தேங்கியுள்ள குப்பையில் தீ வைத்து விடுவதால் புகை தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீ அதிகரித்ததை தொடர்ந்து இரண்டு நாட்கள் முழுவதும் நகராட்சி பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் அப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் தொடரும் தீயினால் புகை வெளியேறிய வண்ணம் உள்ளது. இதில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குடியிருப்பை ஒட்டியுள்ள குப்பை கிடங்கை நகராட்சிக்கு சொந்தமான வேறு ஒரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

