/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்
/
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்
கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றம்
ADDED : ஆக 05, 2025 06:50 AM

மூணாறு : தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் ரோட்டில் சரிந்த மண் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறையில் அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் கடந்தாண்டு ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது.
அங்கு மலை மீது நீண்ட விரிசல் ஏற்பட்டதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பீதி அடைந்தனர்.
இருப்பினும் மண்சரிவு ஏற்பட்டு ஓராண்டு ஆகியும் மண்ணை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கன மழையில் ரோட்டில் சரிந்த மண், கற்கள் ஆகியவை குடியிருப்பு பகுதியை சூழும் நிலை ஏற்பட்டதால் பீதி அதிகரித்தது.
இந்நிலையில் ரோட்டில் சரிந்த மண்ணை அகற்றும் பணி நேற்று முன்தினம் மாலை துவங்கி மண் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.