/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பு இல்லாதவருக்கு நோட்டீஸ்
/
சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பு இல்லாதவருக்கு நோட்டீஸ்
சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பு இல்லாதவருக்கு நோட்டீஸ்
சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பு இல்லாதவருக்கு நோட்டீஸ்
ADDED : அக் 18, 2024 05:55 AM
மூணாறு: சொக்கர்முடி மலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தொடர்பு இல்லாதவர்க்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூணாறு அருகே சொக்கர்முடி மலையில் வருவாய்துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, விதிமீறி கட்டுமானங்கள் நடந்தன. அந்த நிலத்திற்கு பட்டா உள்பட ஆவணங்கள் வைத்துள்ள 44 பேருக்கு, அவற்றை தாக்கல் செய்யுமாறு தேவிகுளம் சப் கலெக்டர் செப்.28ல் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி 33 பேர் நேரில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்தனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
நிபந்தனை மீறல்: அங்கு 1965- --1970 கால அளவில் 14.69 ஏக்கரில் பலருக்கு பட்டா வழங்கப்பட்டது. 1964 நிலம் வரம்பு சட்டப்படி ஓராண்டாவது விவசாயம் அல்லது வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மட்டும் நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
அதிர்ச்சி: சொக்கர்முடியில் நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேவிகுளத்தில் வசிக்கும் ஞானதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவருக்கு சொக்கர்முடியில் நிலம் எதுவும் இல்லாததால் நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தனது தந்தை முனியசாமி பெயரில் சொக்கர்முடியில் நிலம் உள்ளதாக பலர் கூறி கேட்டுள்ளேன். அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் போலியாக கையெழுத்திட்டு பட்டா பெற்ற பின்னர் அதனை தங்களின் பெயரில் மாற்றிக் இருக்கலாம்'' என ஞானதாஸ் கூறினார்.