/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோலார் மின் உற்பத்தி : 44 ஆயிரம் வீடுகளில் பேனல் பொருத்த இலக்கு
/
சோலார் மின் உற்பத்தி : 44 ஆயிரம் வீடுகளில் பேனல் பொருத்த இலக்கு
சோலார் மின் உற்பத்தி : 44 ஆயிரம் வீடுகளில் பேனல் பொருத்த இலக்கு
சோலார் மின் உற்பத்தி : 44 ஆயிரம் வீடுகளில் பேனல் பொருத்த இலக்கு
ADDED : மார் 04, 2024 06:04 AM
கம்பம்: வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய 44 ஆயிரம் வீடுகளில் பேனல் பொருத்த இலக்கு நிர்ணயித்து, தேனி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையிலான குழுவினர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை வீடுகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூ.75 ஆயிரம் கோடி நிதி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு கிலோ வாட் கேட்டு விண்ணப்பிக்கும் பொது மக்களுக்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் கேட்பவர்களுக்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது. மானியம் உங்கள் வங்கி கணக்கில் வரவாகும். ஆனால் விண்ணப்பிக்கும் பொது மக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு கிலோவாட் என்றால் ரூ 70 ஆயிரம், 2 கிலோவாட் என்றால் ரூ. 1,40 000 செலுத்த வேண்டும்.
மின் உற்பத்தியில் 300 யூனிட் உங்கள் வீட்டில் தயாரித்து 200 யூனிட் பயன்படுத்தினால், மீதமுள்ள 100 யூனிட்டை வாரியம் எடுத்து கொள்ளும். அதற்கு கட்டணம் வாரியம் வழங்காது. ஆனால் மின் பயன்பாட்டில் அதை சமன் செய்து கொள்ளப்படும். தற்போது மாநில அரசு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு 300 யூனிட் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு உதவி பொறியாளர் ஆயிரம் வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தவும், மாவட்டத்தில் உள்ள 44 உதவி பொறியாளர்களும் சேர்ந்து 44 ஆயிரம் வீடுகளுக்கு சோலார் இணைப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயித்து பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தேனி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில் செயற்பொறியாளர் சந்திரமோகன் கொண்ட குழுவினர் கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் பொது மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சோலார் பேனல் இணைப்பு பொருத்தியுடன் வீடுகளில் தற்போதுள்ள மீட்டர் அகற்றப்படும். வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் துணை மின் நிலையத்திற்கு செல்வதையும், மின் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட வீட்டின் பயன்பாட்டிற்கு மின்சாரம் செல்வதும் கணக்கீடு செய்ய புதிய 'பை வே மீட்டர்' பொருத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

