/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுமுறையில்ஊருக்கு வந்த ராணுவ வீரர் தற்கொலை
/
விடுமுறையில்ஊருக்கு வந்த ராணுவ வீரர் தற்கொலை
ADDED : ஜூலை 06, 2025 04:06 AM
சின்னமனூர்: விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிற்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி ராயர்குல தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சுருளி முத்து 40, இவர் உத்தரப் பிரதேசம், மீரட்டில் இந்திய இராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். இவருக்கு இதே ஊரை சேர்ந்த மனைவி லட்சுமி 33, மகள் அமிழ்தினி 14, மகன் ஹரிவிஸ்வா 11, உள்ளனர். இவர் கடந்த ஜூன் 10 ல் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
ஊரில் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த கணவரை, லட்சுமி ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த பிள்ளைகளையும், மனைவியையும் சத்தம் போட்டு விட்டு, சுருளிமுத்து தனது அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டார். பிள்ளைகளுடன் ஹாலில் துாங்கிய லட்சுமி, காலையில் கணவர் வெளியே வராததை கண்டு கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. அருகில் இருந்த சுருளி முத்துவின் அண்ணன் சின்னையன் மற்றும் அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து பார்த்த போது , படுக்கை அறையில் சுருளி முத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை இறக்கி பார்த்த போது, அவர் இறந்து விட்டது தெரிந்தது.
ஓடைப்பட்டி எஸ்.ஐ கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.

