ADDED : அக் 14, 2024 08:02 AM
தேவாரம் : தேவாரம் வடக்கு தெரு குமரேசன் 33. தேனி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். ஆறு நாட்களுக்கு முன் இவரது மனைவி லீனாவிற்கு வளைகாப்பு செய்து வைத்து, பெரியகுளத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குமரேசன் தனது மனைவியை பார்த்து விட்டு தேவாரம் வந்தார். வரும் போது கம்பத்தில் பைனான்ஸ் மூலம் கார், வாங்கி வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது, 'நீ வாங்கும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தவே முடியாது. அப்படி உள்ள நிலையில் நீ எதற்கு பைனான்ஸில் கார் வாங்கினாய்' என, குமரேசனின் தந்தை இளையராஜா 61, திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த குமரேசன், வீட்டை விட்டு சென்றார். தந்தை பல இடங்களில் தேடியதில் தேவாரம் கரடு அருகே உள்ள தகர கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தேவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.