/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தந்தை இறந்ததும் சிகிச்சையில் இருந்த மகனும் பரிதாபமாக உயிரிழப்பு
/
தந்தை இறந்ததும் சிகிச்சையில் இருந்த மகனும் பரிதாபமாக உயிரிழப்பு
தந்தை இறந்ததும் சிகிச்சையில் இருந்த மகனும் பரிதாபமாக உயிரிழப்பு
தந்தை இறந்ததும் சிகிச்சையில் இருந்த மகனும் பரிதாபமாக உயிரிழப்பு
ADDED : ஜூன் 12, 2025 02:42 AM
கம்பம்: கம்பம் மெட்டு ரோடு கிருஷ்ணாபுரத்தில் வசித்த முபாரக் அலி 68, இறந்த நிலையில், மின்சாரம் தாக்கி சிகிச்சையில் இருந்த இவரது மகன் முகமது இர்பான் 24, பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணாபுரத்தில் வசித்த முபாரக் அலி, ரெமிலா பானு 55 தம்பதியினரின் மகன் முகமது இர்பான் 24 . இவர் ஜூன் 6 ல் சுப்ரமணியசாமி கோயில் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அருகில் உள்ள ஷாகுல் ஹமீது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கம்பு எடுத்த போது மாடிக்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி ஒயர் உரசி, முகமது இர்பான் தூக்கி வீசப்பட்டார்.
அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
தனது ஒரே மகனின் நிலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்த தந்தை முபாரக் அலி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது, திடீரென இறந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு தீவிற சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றியபோது மகனும் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.