sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முருகன் கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம்: அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

/

முருகன் கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம்: அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

முருகன் கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம்: அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

முருகன் கோயில்களில் நடந்த சூரசம்ஹாரம்: அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்


ADDED : அக் 28, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சஷ்டி விரதஇறுதி நாளில் சூரனை முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஷஹார விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

தேனி என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்தபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் கடந்த வாரம்துவங்கிய சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காப்பு களைதலுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

முருகன் உற்ஸவர் வீதி உலா தேனி பெரியகுளம் ரோடு ஸ்ரீவேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டிவிழா துவங்கியது. தினமும் சஷ்டி பாராயணம், முருக பெருமானுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டன.

ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். சஷ்டி நிறைவு நாளான நேற்று காட, முதல் சஷ்டி பாராயணம், கவச பாராயணம், திருப்புகழ் பாராயணம் 36 முறை பாடப்பட்டு,பால்குடம் எடுத்தல், மகா அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் நடந்தன.

அதனைத் தொடர்ந்து மாலையில் முருகபெருமான் உற்ஸவ மூர்த்தி கோயிலில்புறப்பட்டு கம்போஸ்ட் ஓடைத்தெரு, மிரண்டாலயன் மெயின் தெரு, பஞ்சமுகு ஆஞ்சநேய கோயில் தெரு உட்பட நான்கு பிரகார வீதிகளில் வீதிஉலா நடந்தது. அதன் பின் காப்புகளைதல் நடந்தது. இன்று காலை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

போடி: சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது.

செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். 6ம் நாளான நேற்று காலை அம்மனிடம் இருந்து வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

மாலை 4:30 மணிக்கு மேல் சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவை ஏற்பாட்டில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வில் சுப்ரமணியரிடம் பெறப்பட்ட வேலால் சூரபத்மன் வதம் செய்யப்பட்டார்.

காமராஜ் பஜார், தேரடி தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி நகர வலம் புரிந்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கலந்து கொண்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சமேத சுப்பிரமணியரின் தரிசனம் பெற்றனர்.

இன்று முருகனுக்கு விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய பூஜையுடன் காலை வள்ளி, தெய்வானையுடன் தேவசேனா சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

கூடலுார்: கூடல் சுந்தர வேலவர் திருக்கோயிலில் 28வது கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை செய்தனர்.

ஆறாம் நாளான நேற்று காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.

சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகம் நடந்தது.

மாலை நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி 6 ம் நாள் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர் வெள்ளிவேல், வஜ்ரவேலுடன் காட்சியளித்தார்.

மாலையில் 'வெற்றிவேல், வீரவேல்' என பக்தர்கள் கோஷத்துடன் உற்ஸவர் பாலசுப்பிரமணியர் சூரசம்ஹாரத்திற்கு சென்றார்.

திருவள்ளுவர் சிலை அருகே சூரபத்பமனை வேலால் வதம் செய்தார். தொடர்ந்து வரதராஜப் பெருமாள் கோயில் அருகே, தெற்கு அக்ரஹாரம் நுழைவுப்பகுதி, மகாத்மாகாந்தி பூங்கா அருகே என நான்கு இடங்களில் அரக்கர்களை வதம் செய்தார்.

அவ்வப்போது பெய்த மழையிலும் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சூரசம்ஹார நிகழ்வுகளை பார்த்தனர்.

பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் முன்பு ஞானாம்பிகையிடம் வேல் வாங்கிய சிவசுப்பிரமணியர் அரக்கர்களை வதம் செய்தார். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.

ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் விநாயகர், கந்தநாதன், தண்டாயுதபாணி கோயில் 170ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதம் இருந்தனர்.

தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்து கந்த சஷ்டி கவசம் பாடினர். நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.

விரதம் இருந்த பக்தர்கள் பருப்பு நீர் அருந்தி விரதத்தை முடித்தனர். இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலம் இரவில் பக்தர்கள், ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து விரதம் விடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us