/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புளிச்ச பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை; கிலோ ரூ.400 க்கு விற்பனை
/
புளிச்ச பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை; கிலோ ரூ.400 க்கு விற்பனை
புளிச்ச பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை; கிலோ ரூ.400 க்கு விற்பனை
புளிச்ச பழம் கிலோ ரூ.400க்கு விற்பனை; கிலோ ரூ.400 க்கு விற்பனை
ADDED : பிப் 23, 2024 05:45 AM

போடி : மருத்துவ குணம் வாய்ந்த புளிச்ச பழம் சீசன் துவங்கி கிலோ ரூ.400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மலை அடிவாரம் பகுதியில் முட்செடிகள் இடையே புளிச்ச பழம் ஆண்டுக்கு ஒரு முறை காய்க்கும். இதன் காய் பழமாக மாறியவுடன், கருப்பு நிறத்தில் இனிப்பு கலந்த, புளிப்பு சுவையுடன் இருக்கும்.
விதை சதை பிடிப்புடன் இருக்கும். பிப்., முதல் ஏப்., வரை புளிச்ச பழ சீசனாகும். தற்போது சீசன் துவங்கி உள்ளது. இதன் குச்சியை அரைத்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம், வயிற்று புண் குணமாகும். இலையை அரைத்து வெட்டு காயங்களுக்கு தடவினால் விரைவில் குணமாகும்.
புளிச்ச பழத்தை கொட்டையுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, இரைப்பை நோய்கள் குணமாகும். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
இதில் கால்சியம், வைட்டமின், புரோட்டின், கார்போ ஹைட்ரேட் சத்துக்களும் உள்ளன.
சர்க்கரை நோய், எலும்பு வளர்ச்சி, பல் உறுதிப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது என்கின்றனர்.
இப்பழத்தை மொத்த வியாபாரிகளிடம் கிலோ ரூ.250 முதல் 300 வரை விலைக்கு வாங்கி சில்லறையில் கிலோ ரூ.400 க்கு விற்பனை செய்கின்றனர்.
பழம் அரிதாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.