ADDED : அக் 25, 2026 08:06 PM
தேனி: தேனி மாவட்டத்தில் மூணாறு, குமுளியில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அந்த மாவட்டங்களை சேர்ந்தவர் இங்கு கூலி தொழில், போலீஸ், வங்கி, நிதி நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவ்வழித்தடத்தில் படுக்கை வசதி கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இரவில் திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசிக்கு இயக்கப்படும் பஸ்கள் தேனி வரும்போது சீட்கள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தேனியில் ஏறுவதற்கு காத்திருக்கும் பயணிகள் சீட் இன்றி அவதி அடைகின்றனர். சுமார் 250 கி.மீ., தொலைவு வரை உறக்கம் இன்றி பயணிக்கின்றனர். எனவே தேனியில் இருந்து அப்பகுதிகளுக்கு எஸ்.இ.டி.சி., படுக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்க பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
