/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
/
ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED : டிச 01, 2024 07:01 AM

ஆண்டிபட்டி : அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம் உட்பட 21 வகை பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வடை மாலை அணிவித்து மலர் அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. ஆண்டிபட்டி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன்,
பரிவார தெய்வங்களான துர்கை அம்மன், தண்டாயுதபாணி, சரஸ்வதி, மகாலட்சுமி, விநாயகர், ஜெயதேவர், நடராஜர், பைரவர், உட்பட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வரதராஜப் பெருமாள் கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.

