/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பல்கலைவிஞ்ஞானிகளுடன் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
/
பல்கலைவிஞ்ஞானிகளுடன் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
பல்கலைவிஞ்ஞானிகளுடன் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
பல்கலைவிஞ்ஞானிகளுடன் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : மே 30, 2025 03:31 AM
தேனி: மாதந்தோறும் 2அல்லது 4வது வெள்ளிக்கிழமைகளில் பல்கலை விஞ்ஞானிகள், சிறப்பு நிபுணர்களுடன் வட்டார அளவில் வேளாண் தொழில்நுட்ப அறிவுரை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.' என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தமபாளையம், அம்மாபட்டி ஊராட்சி குரும்பபட்டி சமுதாய கூடத்தில், உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை' என்ற புதிய திட்டத்தை வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது: புதிதாக துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் விவசாயிகள் பயிர் சாகுபடியுடன், கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் தொழில்களையும் ஒருங்கிணைந்து செயல்படுத்திட புதிய தொழில்நுட்ப அறிவுரைகள், ஆலோசனை வழங்கப்படும்.
மாதந்தோறும் 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் துறை சார்ந்த நிபுணர்கள், பல்கலை விஞ்ஞானிகளுடன் வட்டாரங்களில் முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.
வேளாண் சேவைகள் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க சிறந்த வாய்ப்பாகும். விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றார்.
நிகழ்வில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தக்காளி நாற்று, இடுபொருட்கள் கலெக்டர் வழங்கினார். துறை அலுவலர்கள்,பணியாளர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.