/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராயப்பன்பட்டியில் நாளை சிறப்பு முகாம்
/
ராயப்பன்பட்டியில் நாளை சிறப்பு முகாம்
ADDED : நவ 28, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தொழிலாளர் நலத்துறை சார்பில் உத்தமபாளையம் ராயப்பன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நாளை (நவ.,29) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் ஆன்லைன் பொருட்கள், உணவு டெலிவரி செய்யும் 'கிக்' தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்கள், அவர்களின் குழந்தைகள் நலத்திட்ட உதவிகள் பெற முடியும்.
விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், வங்கி கணக்குபுத்தகம், ஆதார், ரேஷன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஏதாவது ஒரு வயது ஆவணத்துடன் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்ட உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தெரிவித்துள்ளார்.