/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள்
/
கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள்
ADDED : ஜன 14, 2024 11:35 PM
கம்பம் : பசுக்கள், எருமை இனங்களில் சினைப் பிடிக்கும் சதவீதம் குறைவதற்கான காரணத்தை கண்டறிய கால்நடை பராமரிப்பு துறை சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறது.
சமீபகாலமாக பசு மற்றும் எருமை இனங்களில் சினைபிடிக்கும் சதவீதம் குறைய துவங்கியது. இந்த நிலைமை பால் உற்பத்தியில் எதிரொலிக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு துறை சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு மருந்தகமும் 4 முகாம்கள் வீதம் மொத்தம் 95 முகாம்கள் நடத்தி வருகின்றன.
நேற்று கம்பத்திலிருந்து காமயகவுண்டன்பட்டி ரோட்டில் கால்நடை டாக்டர் செல்வம் தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. உரிமையாளர்கள் தங்களின் மாடுகள் சினை பிடிக்காமல் இருந்து வருவது பற்றி கூறி தீர்வு பெற்றனர். பசுக்கள் பரிசோதிக்கப்பட்டன.
மாடுகளுக்கு தாது உப்பு, சத்து மாவு, பூச்சி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. சினை பிடிக்காததற்கான காரணம், அதை நிவர்த்தி செய்யும் முறைகள், மாடுகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுகள் பற்றி விளக்கப்பட்டது. டாக்டர் செல்வம், கால்நடை ஆய்வாளர்கள் ரஞ்சித்குமார், அனிதா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.