மாணவர்கள் தமிழ் திறனை வளர்க்கசெவ்வாய் தோறும் சிறப்பு வகுப்பு
மாணவர்கள் தமிழ் திறனை வளர்க்கசெவ்வாய் தோறும் சிறப்பு வகுப்பு
UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 04:44 PM
தேனி: அரசு பள்ளிகளில் மாணவர்களின் தமிழ் திறனை வளர்க்கவும், உற்சாகப்படுத்த செவ்வாய்தோறும் தமிழ்பாடவேளையில் ‘தமிழ்பேச்சு, எங்கள் உயிர்மூச்சு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அல்லிநகரம் வட்டார வளமையத்தில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், க.மயிலாடும்பாறை வட்டாரங்களில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. ஒருங்கிணைத்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் தலைமை வகித்தார். மாநில கருத்தாளர்கள் ஈஸ்வரன், ராமசாமி முன்னிலை வகித்தனர். பயிற்சி வகுப்பை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரியன், வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் ஒருங்கிணைத்தனர்.
கல்வித்துறையினர் கூறுகையில், ‘வாரந்தோறும் செவ்வாய்கிழமை பள்ளியில் நடைபெறும் தமிழ் பாடவேளையில் மாணவர்களின் தமிழ் திறனை வளர்க்கும் வகையில் தமிழில் கட்டுரை, கவிதை, கதை எழுதுதல், உருவாக்கம், தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது,’ என்றனர்.
