/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிச.,3ல் கடலில் இறங்கி போராட்டம் சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் முடிவு
/
டிச.,3ல் கடலில் இறங்கி போராட்டம் சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் முடிவு
டிச.,3ல் கடலில் இறங்கி போராட்டம் சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் முடிவு
டிச.,3ல் கடலில் இறங்கி போராட்டம் சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் முடிவு
ADDED : நவ 23, 2025 02:25 AM
தேனி: தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் சென்னையில் டிச.3ல் கடலில் இறங்கி போராட முடிவு செய்துள்ளதாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க தேனி மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வகுப்புகள் எவ்வாறு எடுப்பது என ஆசிரியர்களுக்கும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பாடம் தொடர்பாகவும், திறன் பயிற்சியும் அளித்து வருகிறோம்.
தமிழகத்தில் 1600 சிறப்பு பயிற்றுநர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிகிறோம். எங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கவில்லை.
இது தவிர பயணப்படி பள்ளிக்கல்வித்துறையில் மற்ற பணியாளர்களுக்கு வழங்கி எங்களை புறக்கணிக்கின்றனர். பி.எப்., பிடித்தம் செய்வதில்லை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை நிறைவேற்ற வில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி பள்ளிகளுக்கு சிறப்பு பயிற்றுநர்கள் நியமிக்க வலியுறுத்தியும் நாளை( நவ.,24) முதல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கும் பயிற்சிகளை பதிவேற்றம் செய்யும் 'நலம் நாடி' செயலியில் பதிவேற்றும் பணிகளை புறக்கணிக்க உள்ளோம்.
இதனைத்தொடர்ந்து டிச.,3ல் சென்னை உழைப்பாளர் சிலை, மெரினா கடலில் இறங்கி தொடர் தர்ணாவில் ஈடுபட உள்ளோம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களிடமும் மனு அளித்துள்ளோம் என்றார்.

