/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊதிய உயர்வு கோரி முதல்வருக்கு சிறப்பு பயிற்றுநர்கள் கடிதம்
/
ஊதிய உயர்வு கோரி முதல்வருக்கு சிறப்பு பயிற்றுநர்கள் கடிதம்
ஊதிய உயர்வு கோரி முதல்வருக்கு சிறப்பு பயிற்றுநர்கள் கடிதம்
ஊதிய உயர்வு கோரி முதல்வருக்கு சிறப்பு பயிற்றுநர்கள் கடிதம்
ADDED : ஜூலை 20, 2025 05:07 AM

தேனி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் தேனி தலைமை தபால் நிலையம் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பினர்.
அதில், 'ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 5 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்க செயல் முறை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த செயல்முறையில், கல்வி பணியாளர்கள் விடுபட்டுள்ளனர்.
இரு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், மைய பராமரிப்பாளர்கள், உதவியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கிட ஆணையிட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கி வேண்டும் ,#உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. நிர்வாகிகள் பாண்டியராஜன், கோகிலா, முத்துப்பாண்டி, கீர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.