/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறப்பு மருத்துவ முகாம் நவ.12, 14 16ல் நடக்கிறது
/
சிறப்பு மருத்துவ முகாம் நவ.12, 14 16ல் நடக்கிறது
ADDED : நவ 11, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கோட்டூர் அரசு மருத்துவமனையில் நாளையும் (நவ.12), ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நவ.14, கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவ.16ல் நடக்கின்றன.
முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை நகலுடன் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.