/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
/
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 02, 2025 04:09 AM

தேனி : சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்கள், நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மூலவர், உற்ஸவர்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
பக்தர்கள் தரிசனம் பெற்றுச் சென்றனர். கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் வழிபாடு செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களில் பூஜைகள் நடந்தன.
வீடுகளில் பள்ளி மாணவ, மாணவிகள், நோட்டுகள், புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்தும், அவல், பொரிகடலை, சுண்டல் வைத்து பூஜை செய்தனர். ஆட்டோக்களுக்கு மாலை அணிவித்து டிரைவர்கள் சுவாமி கும்பிட்டனர்.