/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் காயமடைந்த சிறப்பு எஸ்.ஐ., பலி
/
விபத்தில் காயமடைந்த சிறப்பு எஸ்.ஐ., பலி
ADDED : மார் 28, 2025 05:49 AM

தேனி; தேனி அருகே நடந்த விபத்தில் காயமடைந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு எஸ்.ஐ., அழகர்சாமி 59, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பம் கிராமச் சாவடி தெரு அழகர்சாமி. இவர் தேனி நெடுஞ்சாலைத்துறை ரோந்து பிரிவு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார். மருந்துகள் வாங்குவதற்காக கடந்த பிப்.18ல் டூவீலரில் தேனி வந்தார். திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோட்டில் வீடு திரும்பினார். போடேந்திரபுரம் விலக்கு அருகே சென்ற போது டூவீலரில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். டாக்டர் ஆலோசனையில் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தவர், மார்ச் 25ல் இறந்தார். மனைவி லதா புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.