/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காயில் செயற்கை கலர் சேர்ப்பதை தவிர்க்க ஸ்பைசஸ் வாரியம் வேண்டுகோள்
/
ஏலக்காயில் செயற்கை கலர் சேர்ப்பதை தவிர்க்க ஸ்பைசஸ் வாரியம் வேண்டுகோள்
ஏலக்காயில் செயற்கை கலர் சேர்ப்பதை தவிர்க்க ஸ்பைசஸ் வாரியம் வேண்டுகோள்
ஏலக்காயில் செயற்கை கலர் சேர்ப்பதை தவிர்க்க ஸ்பைசஸ் வாரியம் வேண்டுகோள்
ADDED : ஜன 18, 2024 06:10 AM
கம்பம் : ஏலக்காயில் செயற்கை கலர் சேர்ப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என ஸ்பைசஸ் வாரியம், ஏல விவசாய சங்கங்கள், ஆக்சன் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்தை கேரளா பகிர்ந்து கொள்கிறது.
ஏலச்செடிகளில் இருந்து ஏலக்காய் பழமாக பறித்து, சூடுபடுத்தி பின் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர், காற்று, வெளிச்சம் இல்லாத இடத்தில் கோணிப்பையில் தைத்து பாதுகாக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை ஒரிஜினல் கலர் இருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கு தான் பச்சை கலர் இருக்கும். அதன்பின் கலர் குறைந்து விடும். ஆனால் குணம் மாறாது. மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் போது, வியாபாரிகள் கலர், எடை, சைஸ் போன்றவற்றை பார்த்தே விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கூடுதல் விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் சிலர் ஏலக்காய்களுக்கு செயற்கை கலர் சேர்க்கின்றனர். ஏலப்பழங்களை உலர்த்தி தர வாடகைக்கு ஸ்டோர் வைத்துள்ளவர்களும் செயற்கை கலர் ஏற்றுகின்றனர். ஸ்பைசஸ் வாரிய எச்சரிக்கை, உணவு பாதுகாப்பு துறை ரெய்டு காரணமாக செயற்கை கலர் அடிப்பது குறைந்தது.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் மீண்டும் செயற்கை கலர் பிரச்னை தலைதூக்கி உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகையில், செயற்கை கலர் அடிப்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. இருந்தபோதும் ஒரு சிலர் இன்னமும் அதை செய்வதாக தகவல் வருகிறது. விவசாயிகள் செயற்கை கலர் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏலவிவசாய சங்கங்களும், ஆக்சன் நிறுவனங்களும், செயற்கை கலர் அடிப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் ஸ்பைசஸ் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.