/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாங்க் கியாரண்டி அளவிற்கே ஏலக்காய் பதிவு செய்ய ஸ்பைசஸ் வாரியம் கிடுக்கிப்பிடி

ADDED : மார் 17, 2024 06:30 AM
கம்பம்: ஏலக்காய் ஆக்சன் நிறுவனங்கள் தாங்கள் கொடுத்துள்ள பாங்க் கியாரண்டி அளவிற்கே ஏலக்காய்களை பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என ஸ்பைசஸ் வாரியம் கிடுக்கி பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏலக்காய்யை மற்ற வேளாண் விளை பொருள்களை போன்று விற்பனை செய்ய முடியாது. சாகுபடியாகும் ஏலக்காய்களை ஸ்பைசஸ் வாரிய அங்கீகாரம் பெற்ற ஏல நிறுவனங்களிடம் தர வேண்டும். அந்த நிறுவனங்கள் ஸ்பைசஸ் வாரியத்தின் இ ஆக்சன் மையங்களில் பதிவு செய்து ஸ்பைசஸ் வாரியத்தின் அனுமதி பெற்ற வியாபாரிகள் ஏலக்காயை கொள்முதல் செய்வார்கள். ஏல நிறுவனங்கள் விற்பனை செய்த 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்.
ஏல நிறுவனங்கள் ஸ்பைசஸ் வாரியத்திற்கு பாங்க் கியாரண்டி கொடுக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து ஏல நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த பாங்க் கியாரண்டி, தற்போது ஏல நிறுவனங்கள் வர்த்தகம் செய்யும் அளவிற்கு பாங்க் கியாரண்டி வழங்க உத்தரவிட்டது .
அதிலும் கியாரண்டி தொகைக்குள் வியாபாரம் செய்ய வேண்டும். கியாரண்டி தொகைக்கு மேல் ஏலக்காய் பதிவு செய்து விற்பனை செய்ய அனுமதி இல்லை என வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் 20 டன் முதல் 80 டன் வரை பதிவு பண்ணி விற்பனை செய்கிறது.