ADDED : ஜூலை 24, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா, நகராட்சி நகர்நல அலுவலர் கவிப்பிரியா தலைமையில் இறைச்சி கடைகள், மீன் விற்பனை நிலையங்களில் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
பங்களாமேடு, அரண்மனைப்புதுார் விலக்கு, பாரஸ்ட்ரோடு, என்.ஆர்.டி.ரோடு, பெரியகுளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன் 10 கிலோவை கைப்பற்றி அழித்தனர். மேலும் சுகதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். உணவுப்பாதுகாப்பு அலுவலர் லிங்கம், நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன், எஸ்.ஐ., ஜெயசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.