/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி, ஆண்டிபட்டி தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை

ADDED : டிச 08, 2025 05:49 AM
தேனி: ''மாவட்டத்தில் உள்ள போடி, ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. தற்போது இடம் தேர்வு முடிந்து கம்பம் தொகுதிக்கு உட்பட்ட கோம்பை பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளான போடி, ஆண்டிபட்டி பகுதிகளில் நகர் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும். மினி ஸ்டேடியம் அமைந்தால் மாணவர்கள், இளைஞர்கள் பயிற்சி பெறுவது எளிதாக இருக்கும். இதனால் இப்பகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.