ADDED : பிப் 17, 2025 05:44 AM

தேவதானப்பட்டி: 'மாணவர்கள் உடல், மனவலிமையுடன் பொறுமையுடன் அணுகினால் வெற்றி பெறலாம்.' என, தோட்டக்கலைக் கல்லுாரி பேராசிரியர் ராஜதுரை பேசினார்.
பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார்.
துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றியம் அலுவலர் பிரேம்குமார், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து தோட்டக்கலைக் கல்லுாரி பேராசிரியர் ராஜதுரை பேசுகையில், 'மாணவர்கள் உடற்பயிற்சி செய்து தங்களின் உடல் வலிமையை மேம்படுத்தியும், மன வலிமையால் எந்த ஒரு காரியத்திலும் பொறுமையுடன் அணுகினால் வெற்றி பெறலாம்.', என்றார்.ஓட்டப்பந்தயம், தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.-

