/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விழிப்புணர்வு வீடியோவில் விளையாட்டுத்துறை அலட்சியம்
/
விழிப்புணர்வு வீடியோவில் விளையாட்டுத்துறை அலட்சியம்
விழிப்புணர்வு வீடியோவில் விளையாட்டுத்துறை அலட்சியம்
விழிப்புணர்வு வீடியோவில் விளையாட்டுத்துறை அலட்சியம்
ADDED : ஆக 15, 2025 02:40 AM
தேனி: தேனியில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோவில் தேனி கலெக்டர், நாமக்கல் மாவட்ட அலுவலர்கள் பேசுவது போன்று தயாரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் என 5 பிரிவுகளில் நடக்கிறது.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் விண்ணப்பிக்க நாளை(ஆக.,16) கடைசி நாளாகும். இதற்காக கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசுவது போன்ற வீடியோ சமூக வளைதளங்களில் மாவட்ட விளையாட்டுத்துறையால் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோ துவக்கத்தில் நாமக்கல் மாவட்டம் என துவங்குகிறது. பின்னர் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்குமாறு தேனி கலெக்டர் அழைப்பு விடுக்கிறார்.
அதனை தொடர்ந்து கல்லுாரி மாணவிகள், விளையாட்டு வீரர்கள், பேராசிரியை, பேசுகின்றனர்.
அவர்கள் முதல்வர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த வீடியோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என ஒரு பெண் பேசுகிறார்.
அவர் வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரி ஆவார். அதனை கூட கவனிக்காமல் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
எடிட்டிங்கில் தவறு இதுபற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் கூறியதாவது, 'விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோ தயாரிக்கப்பட்டது.
வீடியோ எடிட்டிங் செய்த போது தவறு நடந்து விட்டது,' என்றது.