ADDED : டிச 11, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநில போட்டிகளில் 3ம் இடம்
தேனி: மாவட்ட விளையாட்டு விடுதி மாணவர்கள் திருவண்ணாமலையில் நடந்த பாரதியார் தின கபடி போட்டியில் 19 வயது பிரிவில் 3ம் இடமும், திருச்சியில் நடந்த குடியரசு தின கூடைப்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 3ம் இடமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், பயிற்சியாளர்கள் பாராட்டினார்.
செஸ் போட்டியில் சாதனை
தேனி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தென்காசியில் நடந்த மாநில செஸ் போட்டியில் தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் வேதாந்த் நரசிம்மன் 2ம் பரிசும், மாணவி ஸ்ரீமுகிலா பங்களிப்பு சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற, பங்குபெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நாராயணபிரபு பாராட்டினார்.

