/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேவை மையத்தில் குறைந்த விலையில் இடுபொருட்கள்
/
சேவை மையத்தில் குறைந்த விலையில் இடுபொருட்கள்
ADDED : டிச 11, 2025 05:49 AM
தேனி: புதிதாக துவங்கப்பட உள்ள வேளாண் சேவை மையங்களில் குறைந்த விலையில் இடு பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
வேளாண்துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் 31 இடங்களில் உழவர் சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம் மையங்களை வேளாண் பட்டதாரிகள் நிர்வகிப்பார்கள்.
இந்த சேவை மையங்களில் விதைகள், உரங்கள், மருந்துகள், வாடகை இயந்திரங்கள், வேளாண் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. மற்ற இடங்களை விட இங்கு இடுபொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இடு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், சேவை மைய பட்டதாரிகள், அரசு துறைகள் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் நடக்கிறது. விரைவில் 19 சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன என்றனர்.

