ADDED : டிச 11, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம் நடந்தது.
56 மாணவர்களுக்கு ரூ. 2.59 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு மைய இயக்குநர் ரவிக்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், நிர்வாகி சுப்ரமணி, முதல்வர் மதளைசுந்தரம் பங்கேற்றனர்.

