/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 11, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழக அரசால் சமுதாய நல்லிணக்கத்திற்காக கபீர்புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கு போலீசார், ஆயுதப்படை வீரர்கள், போலீசார், அரசுப்பணியாளர்கள் தவிர பிறர் விண்ணப்பிக்கலாம். ஜாதிபிரச்னைகள், கலவரம், வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, விருது வழங்கப்படுகிறது.
தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் டிச.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசால் நியமிக்கப்பட்டு குழு தேர்வு செய்பவர்களுக்கு 2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

