/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் கவலை
/
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் கவலை
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் கவலை
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் கவலை
ADDED : டிச 11, 2025 05:46 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில் விளை நிலங்களுக்குள் வரும் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி, வரதராஜபுரம், மறவபட்டி, அனுப்பபட்டி, மேக்கிழார்பட்டி உட்பட பல கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விளைநிலங்களில் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த முடியால் விவசாயிகள் தவிக்கின்றனர்.
வரதராஜபுரம் விவசாயிகள் கூறியதாவது: மலைப்பகுதியில் இருந்து சில கி.மீ.,தூரத்தில் உள்ள விவசாய நிலங்களில் மக்காச்சோளம், காய்கறிகள், தீவனப்புல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இரவில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் மொத்த பயிர்களையும் சேதப்படுத்தி செல்கிறது. இரவில் வந்து சென்ற காட்டுப் பன்றிகள் தற்போது பகலிலும் வர துவங்கியுள்ளது. பட்டாசு வெடித்து விரட்டினாலும் சில மணி நேரங்களில் மீண்டும் வந்து விடுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு கூறினர்.
வனத்துறையினர் கூறியதாவது: வனவிலங்குகள் மூலம் பயிர்கள் சேதமானால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது குறித்து வனத்துறையில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் செய்தால் நிவாரணம் பெற்று தரப்படும் என்றனர்.

