/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம் எட்டு இடங்களில் நேரடி ஒளிபரப்பு
/
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம் எட்டு இடங்களில் நேரடி ஒளிபரப்பு
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம் எட்டு இடங்களில் நேரடி ஒளிபரப்பு
ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகல கொண்டாட்டம் எட்டு இடங்களில் நேரடி ஒளிபரப்பு
ADDED : ஜன 23, 2024 05:11 AM

தேனி: உத்தரபிரதேசம், அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் எல்.இ.டி., திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்து, ராமர் திருவுருவ படத்திற்கு பூஜை செய்து இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டினர்.
தேனியில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, ஹிந்து முன்னணி, பா.ஜ., விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு முன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருவருவ படம் அலங்கரிக்கபபட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், பா.ஜ., வர்த்தகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி,மாவட்ட அரசு துறைப் பொறுப்பாளர் விஜயகுமார், ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரும் இணைந்து ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம' என்ற மந்திரம்108 முறை பராயணம் செய்து ஆஞ்சநேயர், ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஹிந்து முன்னணி நிர்வாகி மணி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.நிகழ்வில் நாயுடு சமுதாய மாவட்டச் செயலாளர் சுப்புராம், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ராம் கண்ணன், பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோயில் கரசேவர்கள் சுந்தரேசன், ராதாகிருஷ்ணராஜா, இளங்கோ ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் உமையராஜன் தொகுத்து வழங்கினார். ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் தேனியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
அல்லிநகரம் சிவசக்தி விநாயகர் கோயிலில் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை, தேனி மாவட்ட சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா புரோகிதர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீராமர் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜை நடந்தன. மாவட்டத் தலைவர் ராஜாஜி, ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி ஏற்பாடு செய்திருந்தனர்.
நேரடி ஒ ளிப ரப்பு
தேனி: என்.ஆர்.டி., திருமண மண்டபத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், சீதா லட்சுமண பரத சத்ருக்ண அனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தி திருவுருவபடத்திற்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீராம நாம பாராயணமும் நடந்தது. டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
தேனி வேதபுரி சித்பவானந்த ஆசிரமம் ஸ்வாமி குரு க்ரூபாநந்தா ஆசியுரை வழங்கினார். எல்.இ.டி, திரையில் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராமச்சந்திர திருவுருவ படத்திற்கு மலர் துாவி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து எழுச்சி முன்னணி நிறுவனத தலைவர் பொன்ரவி, தலைவர் ராமராஜ் செய்திருந்தனர்.
கொண்டாட்டம்
தேனி மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ராமரின் திருவுருவ படத்திற்கு பூஜை நடந்தது. பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மாவட்ட இளைஞரணித் தலைவர் அஜித் தலைமை வகித்தார்.தேனி நகரத தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் ஜெயம்முருகன், மாவட்ட அரசு தொடர்ப்பு மாவட்டத் தலைவர் விஜயக்குமார் பங்கேற்றனர். சுப்பன் செட்டித் தெருவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளியில் பூஜை
தேனி லைப் இன்னோவேஷன் பள்ளியில் ராமர், பெருமாள் திருவுருவ படங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பா.ஜ., கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். ராமகீதங்கள், ஜெய் ஸ்ரீராம் நாம ச்ங்கீர்த்தனை பாராயணம் செய்யப்பட்டது.
எட்டு இடங்களில் ஒளிபரப்பு
தேனி ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் என்.ஆர்.டி., மஹால்,போடி கிழக்குத் தெரு மறவர்சாவடி, ராசிங்காபுரத்தில் பா.ஜ., மேற்கு ஒன்றியச் செயலாளர் தாமோதரன் தலைமையில் எல்.இ.டி., திரையில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. சின்னமனுாரில் நகரத் தலைவர் லோகேந்திரராஜன் தலைமையில் முத்தாலம்மன் கோயில் வளாகத்திலும், கம்பம் தெற்கு நந்தகோபாலன் கோயிலில் ஆர்.எஸ்.எஸ்., நகர் துணைத் தலைவர் விஸ்வா, பா.ஜ., நகரத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் காமாட்சியம்மன் கோயிலில் ஒளிப்பரப்பப்பட்டது. ஹிந்து முன்னணி ஓடைப்பட்டி ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமையில் சீப்பாலக்கோட்டை ரங்கநாதர் கோயிலில் எல்.இ.டி., திரை உட்பட 8 இடங்களில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வுகள் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் 67 இடங்களில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கம்பம்: பகுதி கோயில்களில் அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராம நாம ஜெபம், பொங்கல் வைத்தல், அகல் விளக்கு ஏற்றுதல்அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். முன்னதாக காலை முதல் ராமநாம ஜெபம் நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. கம்ப ராயப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ராம நாம ஜெபம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. பெண் பக்தர்களுக்கு மாலை வீடுகளில் ஏற்றுவதற்காக அகல் விளக்குகளை ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.
சின்னமனூர் அக்ராஹரத்தில் உள்ள ராமர் கோயிலில் 600 க்கு மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நேற்று மாலை வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டது.
சீப்பாலக்கோட்டை ராமர் பஜனை மடத்தில் விநாயகர், ரங்கநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. ஹிந்து முன்னணி தெற்கு மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய அமைப்பு செயலாளர் ரங்கசாமி பங்கேற்றனர்.
கம்பம் தேரடியில் நகர் பா.ஜ. தலைவர் ஈஸ்வரன் தலைமையில் பா.ஜ. தொண்டர்களும், நிர்வாகிகளும் உழவாரப் பணி செய்தனர்,உத்தமபாளையம் சமணர் சிற்பம் , குகை கோயில் அமைந்துள்ள பகுதியில் நகர் பா.ஜ. தலைவர் தெய்வம், மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன்ராஜா தலைமையில் பா.ஜ. நிர்வாகிகளும், தொண்டர்களும் உழவார பணி மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டி: -அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி பாலக்கோம்பை ராமர் கோயிலில் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜை அன்னதானம் நடந்தது.
முன்னதாக கிராமத்தில் விரதம் இருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் செய்து, 21 புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயில் கலசம் மற்றும் சுவாமிக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டனர். பொதுமக்கள் சார்பில் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி: போடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஸ்ரீராமர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, ராம ஜெயம் மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஜமீன்தார் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் தண்டபாணி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், போடி நகர தலைவர் சந்திரசேகர், பாராளுமன்ற இணை அமைப்பாளர் ராமநாதன், இந்து முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் வைத்து பிரசாதம், அன்னதானமும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ராம ஜென்ம பூமியின் அறக்கட்டளை போடி நகர இணை அமைப்பாளர்கள் கண்ணன், செல்வகுமார், அங்குவேல், வீரமணி, முருகேசன் செய்திருந்தனர். போடி நகராட்சி 17 வது வார்டில் பா.ஜ., கவுன்சிலர் சித்ரா தலைமையில் ராமர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் தண்டபாணி, நகர தலைவர் சந்திரசேகர் உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
பெரியகுளம்: வடகரை கோதண்ட ராமர் கோயிலில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ராமர் பட்டாபிஷேகம் அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் காட்சியளித்தனர்.
பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. எண்டப்புளி பகுதி முத்தாலம்மன் கோயிலில் ராமர் படம் வைத்து பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.
ராமபிரான் அவதாரம் குறித்து லோக்சபா பா.ஜ., அமைப்பாளர் ராஜபாண்டியன் பக்தர்களிடம் பேசினார்.பெரியகுளம் பாதாள காளியம்மன் கோயிலில் ராமர் படத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ஜெயபாண்டியன் பூஜை நடத்தி தீபாராதனை காட்டினார்.
கூடலுார்: - பா.ஜ.,கட்சி சார்பில் கூடலழகிய பெருமாள் கோயில் முன்பு ராமர் படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கினர். பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஹிந்து முன்னணி பேரியக்கம் சார்பில் பொங்கல் வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாரதிய கிசான் சங்கம் சார்பில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு நேரில் சென்று பிரசாதம் வழங்கினர்.
மூணாறு: ராமர் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ. சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக ராம நாம பஜனை பாடல்கள் பாடினர். மாலையில் கோயிலிலும் நகர் முழுவதும் அகல் விளக்கு ஏற்றினர். பொது மக்கள், தோட்டத் தொழிலாளிகள் ஆகியோர் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி ராமர் பிராண பிரதிஷ்டையை கொண்டாடினர்.

