ADDED : டிச 18, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை காந்திநகரைச் சேர்ந்தவர் குணசேகரன் 35. ஆட்டோ டிரைவராக உள்ளார்.
8 மாதங்களுக்கு முன் இவரது ஆட்டோவை கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனி தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் 40. சேதப்படுத்தினார்.
இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. ராஜசேகரனிடம், தனது குடும்பம் வறுமையில் உள்ளது ஆட்டோவை சரிசெய்து தருமாறு குணசேகரன் கேட்டுள்ளார்.
இதற்கு ராஜசேகரன் மறுத்து குணசேகரனை அவதூறாக பேசி கத்தியால் குத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு குணசேகரன் சேர்க்கப்பட்டார். வடகரை போலீசார் ராஜசேகரனை தேடி வருகின்றனர்.--