/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக்கேடு
/
தேனி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக்கேடு
தேனி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக்கேடு
தேனி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீரால் சுகாதாரக்கேடு
ADDED : அக் 25, 2024 05:52 AM

தேனி: தொடர் மழையல் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டின் பிரதான நுழைவாயிலில் மழை நீர் ஒழுகி வருவதாலும், வளாகத்தில் குப்பையுடன் மழைநீரும் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இப் பஸ் ஸ்டாண்ட் தேனி அல்லிநகரம் நகராட்சியின் சார்பில் ரூ.15.25 கோடி மதிப்பில் 7.35 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
இது 2014 ஜன., 2ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மூன்று நடை மேடைகள் வழியாக வெளியூர் செல்லும் தொலை துார பஸ்கள், உள்ளூர் பஸ்கள் இங்கு இயக்கப்படுகின்றன. இங்கு பிரதான நுழைவாயிலின் மேலே உள்ள கட்டடத்தில் இருந்து மழை நீர் ஒழுகுகிறது. தெற்குப்புறத்தில் கண்ணாடிஉடைந்துள்ளது. மேலும் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்ட உட்புற பகுதியில் குப்பை கூடாரங்களாக மாறியுள்ளது. அதில் மழை நீரும் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகள் தொடர்ந்து பெய்த மழையால் சேதமடைந்துள்ளது. அதனை நகராட்சி சீரமைக்க பொது மக்கள், பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

