/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அம்மச்சியாபுரத்தில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
அம்மச்சியாபுரத்தில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
அம்மச்சியாபுரத்தில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
அம்மச்சியாபுரத்தில் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஏப் 27, 2025 06:55 AM

தேனி: ஆண்டிபட்டி ஒன்றியம், அம்மச்சியாபுரம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 பேர் வசிக்கின்றனர்.
இக் கிராமம் கலெக்டர் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால் இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னுார் செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்ட சாக்கடை ராஜவாய்க்காலில் பல ஆண்டுகளாக இணைக்கப்படாமல் உள்ளது.
இதனால் இந்த சாக்கடையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் கடைகோடி கிராமங்களை ஆய்வு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலெக்டர் ஆபீசில் இருந்து எட்டி பார்க்கும் துாரத்தில் உள்ள அம்மச்சியாபுரத்தில் ஏன் இந்த அவல நிலை என மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.