ADDED : ஆக 29, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம், ஆக. 30
உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் படிக்கட்டு ஏறும் மரத்தான் போட்டி நடந்தது. ஹாக்கி வீரர் மேஜர் தியான்சந்த் நினைவாக போட்டி நடந்தது. கல்லூரி முதல்வர் முகமது இஸ்ஹாக் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திரளாக மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களின் உடல் தகுதி, மன உறுதி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்த இந்த போட்டிகள் நடந்ததாக உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் நத்தர் மீரான் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
