/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி; சென்னை எஸ்.ஆர்.எம்., அணி சாம்பியன் பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் முதலிடம் பெற்றது

ADDED : ஜன 30, 2024 07:00 AM

போடி : போடியில் மாநில அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றன.
போடியில் மாநில கூடைப்பந்து ஆண்களுக்கான போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்.,அணி முதலிடம் பெற்று ரூ. 50 ஆயிரம், கோப்பையும் வென்றது.
சென்னை எஸ்.டி.ஏ., அணி 2ம் இடம் பெற்று ரூ.30 ஆயிரம், கோப்பையும், வத்தலக்குண்டு யங்ஸ்டார் அணி 3 ம் இடம் பெற்று ரூ.30 ஆயிரம், கோப்பையும் பெற்றன.
இதில் சென்னை எஸ்.ஆர்.எம்., அணியை சேர்ந்த லித்திலா குமார் தொடர் நாயகனுக்கான விருதும், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணியைச் சேர்ந்த மும்முடையான் வளர்ந்து வரும் வீரருக்கான விருதும் பெற்றனர்.
*பெண்களுக்கான போட்டியில் சென்னை ரைசிங் ஸ்டார் அணி முதலிடம் பெற்று ரூ. 20 ஆயிரம், கோப்பையும் வென்றது.
சென்னை எஸ்.பி.சி., அணி 2 ம் இடம் பெற்று ரூ.15 ஆயிரம், கோப்பையும், சென்னை எத்திராஜ் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி 3ம் இடம் பெற்று ரூ.13 ஆயிரம், கோப்பையும், பெற்றன.
இதில் சென்னை எஸ்.பி.சி., கூடைப்பந்தாட்ட அணியை சேர்ந்த ஹரிணி தொடர் வீராங்கனை விருதும், சென்னை ஜெ.ஐ.டி., அணியை சேர்ந்த ஸ்ரீவர்ஷினி வளர்ந்து வரும் வீராங்கனை விருதும், சென்னை ரைசிங் ஸ்டார் அணியை சேர்ந்த யுவஸ்ரீ வளர்ந்து வரும் சிறப்பு வீராங்கனைக்கான விருதும் பெற்றனர்.
* பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கூடைப் பந்தாட்ட கழக இணை செயலாளர் அருள் வெங்கடேஸ், துணைத் தலைவர் தியாகராஜன், ஐ.சி.எப்., தொழிற்சங்க பொதுச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
போடி கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தெய்வேந்திரன், செயலாளர் சந்தோஷ் குமார், பொருளாளர் சீனிவாசன், துணைத் தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.