ADDED : நவ 10, 2025 12:54 AM

கூடலுார்: கூடலுாரில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
கூடலுாரில் மாஸ் ஒயாமாவின் இன்டர்நேஷனல் கியோ குஷின் காய்கான் கராத்தே சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பெண்கள் ஆண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் சென்சாய் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் மணி, வேலுச்சாமி, கலைமகன், காந்திமகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
போட்டியை முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் கரிகாலன், தி.மு.க., மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அறிவழகன் துவக்கி வைத்தனர். சிறுவர் சிறுமிகளுக்கான போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கூடலுார் பயிற்சியாளர் ரஞ்சித், மாவட்ட தலைமை பயிற்சியாளர் பரமன், பயிற்சியாளர்கள் பக்கீர் மைதீன், சுக்கூர் செய்திருந்தனர்.

