
கம்பம்: கம்பத்தில் நேற்று காலை நுாற்றுக்கணக்கான பள்ளிகள் பங்கேற்ற யோகாசன போட்டிகள் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தன.
இப்போட்டிகளை மாவட்ட யோகாசன சங்கத்தின் தலைவர் காந்தவாசன், நாகமணியம்மாள் பள்ளி இணைச் செயலாளர் சுகன்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். கம்பம் எம்.கே.எஸ்., குழும நிறுவனங்களின் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை டாக்டர் சூரியகுமார் வரவேற்றார். போட்டிகளில் முன்னோக்கி வளைதல் பிரிவில் பேர்லேண்ட் பள்ளி, விருதுநகர் ராஜாங்கம் மெட்ரிக் பள்ளி, பின்னோக்கி வளைதல் பிரிவில் பெப்பிள்ஸ் பள்ளி, திருமங்கலம் கே.பி.என்., பள்ளி, சிறப்பு பிரிவில் டைனி பார்க் பள்ளி , ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப் பள்ளி, பேலன்ஸ் பிரிவில் சிஷ்யா பள்ளி, ஒட்டன்சத்திரம் அட்சயா, சீனியர் பிரிவில் நாகமணியம்மாள் பள்ளி, கிரசன்ட் பள்ளி, நின்ற நிலை பிரிவில் எஸ்.ஏ.பி., மெட்ரிக் பள்ளி.
அமர்ந்த நிலை பிரிவில் மழலையர் பள்ளி, ஜூனியர் பிரிவில் ஆர்.எஸ்.கே., பள்ளியும் வெற்றி பெற்றன. போட்டிகளை யோகா பயிற்சியாளர்கள் துரை ராஜேந்திரன், ரவிராம் செய்திருந்தனர்.

