/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில சிலம்பாட்ட போட்டி; தேனி மாணவிகள் முதலிடம்
/
மாநில சிலம்பாட்ட போட்டி; தேனி மாணவிகள் முதலிடம்
ADDED : பிப் 21, 2024 05:38 AM
போடி : மாநில அளவில் காட்பாடியில் நடந்த மகளிருக்கான சிலம்பாட்ட போட்டியில் தேனி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அஸ்டடு அகடா கழகம் சார்பில் காட்பாடி வி.ஐ.டி., கல்லூரியில் நடந்த மாநில களிர்களுக்கான சிலம்பாட்ட போட்டி நடந்தது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி 2ம் ஆண்டு மாணவி காருண்யா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். போடி சிசம் சி.பி.எஸ்.இ., பள்ளி 7 ம் வகுப்பு மாணவி சாய்பாரதி, போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி8 ம் வகுப்பு மாணவி அபிநயா, பங்கஜம் பெண்கள் நடுநிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி விஷாலி 2 ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர். தேனி லிட்டில் கிங்டம் சி.பி.எஸ்.இ., பள்ளி 4 ம் வகுப்பு மாணவி தேஜா ஸ்ரீ, போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவி விஜி, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 9 ம் வகுப்பு மாணவி துர்க்கை வேணி 3 ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை சிலம்பாட்ட கழக மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் சொக்கர் மீனா, துணைத் தலைவர் சதீஸ்குமார், மாஸ்டர்கள் நீலமேகம், தீபன், மோனீஸ்வர், வாஞ்சிநாதன் ஆகியோர் பாராட்டி பரிசுகள்வழங்கினர்.

