தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாநில வலு துாக்கும் போட்டி; போடி மாணவர்கள் முதலிடம்

மாநில வலு துாக்கும் போட்டி; போடி மாணவர்கள் முதலிடம்

மாநில வலு துாக்கும் போட்டி; போடி மாணவர்கள் முதலிடம்


ADDED : ஜூன் 17, 2025 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி; மாநில அளவில் நடந்த வலு தூக்கும் போட்டியில் போடி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

சேலம் மாவட்ட வலு தூக்கும் சங்கமும், மகாத்மா காந்தி உடற்பயிற்சி கூடமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி சேலத்தில் நடந்தது. போட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட போடி நீலமேகம் பிள்ளை அகாடமியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

பெண்களுக்கான சப் ஜூனியர் 63 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாண்டிமீனா, 69 கிலோ எடை பிரிவில் மாணவி துர்கைவேணி, 76 கிலோ எடை பிரிவில் போடி பங்கஜம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி விசித்திரா, 84 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவி தங்கேஸ்வரி ஆகியோர் முதலிடம் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

ஆண்களுக்கான சப் ஜூனியர் 53 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் கோகுல் பாலன், நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் கவி பாரதி, தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ஜெய்தீப், 69 கிலோ எடை பிரிவில் சேலம் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவர் அருண் பாண்டியன், போடி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவர் கங்கேஷ் 3ம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேனி மாவட்ட வலு தூக்கும் சங்க தலைவர் குமார், செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர் மீனா, மோனீஸ்வர், வாஞ்சிநாதன், தீபன் சக்கரவர்த்தி, நவநீதன், பெஸ்கி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us