/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதிமீறுவோரை கண்காணிக்க ஸ்டேஷன் வாரியாக குழு
/
விதிமீறுவோரை கண்காணிக்க ஸ்டேஷன் வாரியாக குழு
ADDED : மார் 20, 2024 12:21 AM
போடி : தேர்தல் விதிமீறுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கண்காணிப்பு குழு அமைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் விதிமீறி பேனர், பிளக்ஸ் போர்டு, சுவர் விளம்பரங்கள் செய்வது, வாக்காளர்களுக்கு பணம், பொருள், இலவச வேஷ்டி, சேலை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் சர்வே லைன்ஸ் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக் குழுவில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் அரசு அலுவலர் ஒருவர், மூன்று போலீஸ்காரர், ஒரு வீடியோ கேமராவுடனும் பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு என தனி வாகனமும் வழங்கப்பட உள்ளது.
இவர்கள் தேர்தல் விதிமீறி நடக்கும் சம்பவங்களை கண்காணித்து வீடியோ எடுத்து அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். பணம், பொருட்கள் கொடுத்தால் அவற்றை பறிமுதல் செய்து அந்தந்த சார்பு கருவூலத்தில் செலுத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

