/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓடையில் மணல் திருட்டு மழைநீர் செல்வதில் சிரமம்
/
ஓடையில் மணல் திருட்டு மழைநீர் செல்வதில் சிரமம்
ADDED : அக் 18, 2024 05:58 AM
போடி: போடி அருகே நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு நீர்வரத்து ஓடையில் மழை நீர் தடுப்புகளை உடைத்து மணல் திருடி வருவதால் மழை நீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நாகலாபுரம் ஊராட்சி மல்லிங்கர்சாமி கரடு ஓடை உள்ளது. தொடர் மழை, 18ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் நீர்வரத்து பெருக்கெடுத்து ஓடும். இதன் மூலம் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வந்தன. தற்போது நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரட்டை ஒட்டி உள்ள ஓடை இருபுறமும் தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஓடை பகுதியில் கட்டப்பட்டு உள்ள மழைநீர் தடுப்புகளை சிலர் உடைத்து மணல் திருடி வருவதால மழைநீர் சீராக செல்ல முடியாத நிலையில் தேங்குகிறது. இதனால் நிலங்களில்நீரை தேக்கி வைக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்த முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சேதம் அடைந்த நீர்தேக்க தடுப்புகளை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.