/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பால் குளிரூட்டும் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
/
பால் குளிரூட்டும் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
பால் குளிரூட்டும் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
பால் குளிரூட்டும் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
ADDED : மே 11, 2025 05:16 AM

பெரியகுளம் தினமலர் செய்தி எதிரொலியால் வெளியில் கிடந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை துவங்கி உள்ளது.
பெரியகுளம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் நவீன இயந்திரம், ஜெனரேட்டர் ஆகியவை ரூ.40 லட்சம் மதிப்பில் ஆவின் நிர்வாகம் வாங்கி கடந்தாண்டு நவம்பரில் கூட்டுறவு சங்க வளாகத்தில் இறக்கியது. இதற்கான அறையும் கட்டப்பட்டுள்ளது.
பால் குளிரூட்டும் மையத்தை ஜனவரியில் திறக்க ஏற்பாடு நடந்தது. ஆவின் அதிகாரிகள் அலட்சியத்தால் ஏழு மாதங்களாக நவீன இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து மழை,வெயிலால் சேதமடைந்து வந்தது.
இயந்திரங்கள் பொருத்தாததால் இத்திட்டம் முடங்கி கிடந்தது. இது குறித்து அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது என தினமலர் நாளிதழில் நேற்று (மே 10ல்) படத்துடன் செய்தி வெளியானது.
தினமலர் செய்தியால் நடவடிக்கை: பெரியகுளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு வந்த தேனி ஆவின் விரிவாக்க அலுவலர் தாரணி மேற்பார்வையில் ராட்சத கிரேன் மூலம் வெயிலில் கிடந்த பால் குளிரூட்டும் இயந்திரத்தை புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்குள் வைக்கப்பட்டது. இதே வழியில் ஜெனரேட்டர் கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாரணி கூறுகையில், 'பெரியகுளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் விரைவில் பால் குளிரூட்டும் மையம் செயல்படும்,'என்றார்.