/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருத்தடை ஆப்பரேஷன் முகாம்; ரூ.5,000 அனுமதி
/
கருத்தடை ஆப்பரேஷன் முகாம்; ரூ.5,000 அனுமதி
ADDED : பிப் 12, 2024 11:12 PM
கம்பம் : பெண்களுக்கான கருத்தடை முகாமில் குறைந்தது 5 பெண்களுக்கு ஆப்பரேஷன் செய்தால் ரூ.5 ஆயிரம் செலவு செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்களுக்கான கருத்தடை ஆப்பரேஷன் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இது தவிர பெண்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் சிறப்பு முகாம் நடத்த ஒரு முகாமிற்கு ரூ.5 ஆயிரம் செலவு செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் முகாமில் குறைந்தது 5 பெண்களுக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையால் பெண்களுக்கான சிறப்பு முகாம்கள், ஆண்களுக்கான என்.எஸ்.வி. எனும் சிறப்பு முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சுகாதாரத் துறையினர் கூறுகையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக்கமாக பெண்களுக்கான கருத்தடை ஆப்பரேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கான சிறப்பு முகாம் இலக்கை எட்டியதால் நடத்தப்படவில்லை என்றனர்.