UPDATED : அக் 11, 2026 04:48 PM
ADDED : அக் 11, 2026 04:46 PM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த வேணடும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துனர்.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சிபகுதிகள், அதனை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறைச்சி கழிவுகள், குப்பையில் உள்ள உணவுகளை சாப்பிட்டு தெருக்களில் சுற்றுகின்றன. ரோட்டில் சண்டையிட்டு டூவீலர்களில் செல்வோருக்கு இடையூறு செய்கின்றன. சிலநேரும் டூவீலர்களில் செல்வோரை விரட்டுவதால் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை குரைப்பதால் அவர்களும் அச்சத்துடன் நடமாடுகின்றனர். ஆடுகளை கடித்து காயப்படுத்துவதால் ஆடுவளர்ப்போர் சிரமம் அடைகின்றனர். தேவதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரி உள்ளனர்.
