/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏழு பேரை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்க சென்ற ஊழியரையும் கடித்தது
/
ஏழு பேரை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்க சென்ற ஊழியரையும் கடித்தது
ஏழு பேரை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்க சென்ற ஊழியரையும் கடித்தது
ஏழு பேரை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிக்க சென்ற ஊழியரையும் கடித்தது
ADDED : ஏப் 11, 2025 05:15 AM

தேனி: தேனி நகராட்சி அல்லிநகரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேரை தெருநாய்கள் கடித்து குதறின. தகவலறிந்து நேற்று தெருநாய்களை பிடிக்க சென்ற நகராட்சி ஊழியரையும் நாய்கள் கடித்தன.
தேனி நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் மாலை, இரவில் குழந்தைகளுடன் செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டன்ஸ்டால் தெரு, தொத்தம்மன் தெரு, கிணற்றுத்தெரு, மச்சால் தெருக்களில் நடந்து சென்றவர்களை தெருநாய்கள் விரட்டி கடித்தன. இதில் கூலித்தொழிலாளி ஈஸ்வரன் 64, விஜயதர்ஷினி 22, ஒண்டிவீரன் நகர் வரதராஜ், பகவதியம்மன்கோவில் தெரு ஸ்ரீதர், ஐயப்பன், கீர்த்திக்குமார்,செல்லப்பாண்டி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.தெருநாய்கள் கடித்தது தொடர்பாக நகராட்சிக்கு அப்பகுதி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
நேற்று நகராட்சி பணியாளர்கள் கோபிநாத் 40, மணிகண்டன் ஆகியோர் அப்பகுதில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு தெருநாய் கோபிநாத்தை கடித்து காயமடைந்தார்.
அவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தனர்.நகர்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.