ADDED : செப் 19, 2026 07:23 PM
தேனி, செப்.20–
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கு சிறப்பு பயிற்சி (டி.ஏ.இ.ஐ., ஸ்கிரிப்ட்) வழங்கப்பட்டது.
இதில் முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சிவக்குமார் வகித்தார். நிகழ்ச்சியில் பக்கவாதம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ‘த்ரோம்போலைசிஸ்’ சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம், பக்கவாதத்தின் அறிகுறிகளை விரைவாக கண்டறிதல், அவசர சிகிச்சையைத் தொடங்குதல் நவீன மருத்துவமனைக்கு நோயாளிகளை தாமதம் இன்றி கொண்டு செல்ல பரிந்துரைத்தல் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை மருத்துவத் துறை தலைவர் பாலசுப்பிரமணியன், நரம்பியல் நிபுணர் சங்கர் கணேஷ், இணைப் பேராசிரியர்கள் வெங்கடேஷ், வள்ளிதேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
