நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் 35 வது கல்லூரி மாணவர் மன்ற விழா நடந்தது. முதல்வர் சரஸ்வதி தலைமை வகித்தார்.
மாணவர் மன்ற ஆலோசகர் பேராசிரியர் முத்துராமலிங்கம், இயற்கை வள மேலாண்மைதுறைத் தலைவர் ஜானவி, பேராசிரியை ஈஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மாணவர் மன்ற செயலாளர் காளிராஜ் அறிக்கையை வாசித்தார்.
மாணவர் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன், மாணவர் மன்ற இணை ஆலோசகர் பேராசிரியை ஈஸ்வரி பரிசு வழங்கினர்.
வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ மன்ற செயலாளர் சுவேதா நன்றி கூறினார்.